பாதாள உலகத்தை ஒடுக்கும் நடவடிக்கைகள் நாளை ஆரம்பம்!

கடந்த சில நாட்களாக இடம்பெற்று வரும் கொலைகள் உள்ளிட்ட பாதாள உலக செயற்பாடுகளை ஒடுக்கும் விசேட நடவடிக்கையொன்று நாளை (27) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் தலைமையில் மேற்கு மற்றும் தெற்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், பயங்கரவாத விசாரணைப் பிரிவு, குற்றப் புலனாய்வுத் திணைக்களம், பொலிஸ் விசேட அதிரடிப் படையினர், பொலிஸ் திணைக்களம், பொலிசார் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் ஏனைய புலனாய்வுத் திணைக்களங்களும் இது தொடர்பான கலந்துரையாடலுக்காக இணைந்தன.