சஜித் பிரேமதாசவின் சகோதரி துலாஞ்சலி நாட்டை விட்டு வெளியேறினார்.
ரணில் விக்ரமசிங்கவின் கொள்ளுப்பிட்டியில் உள்ள தனியார் வீட்டை எரித்து நாசம் செய்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அண்மையில் பதிவு செய்யப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் .சஜித் பிரேமதாசவின் சகோதரி துலாஞ்சலி ஜயக்கொடி நேற்று (26) காலை இலங்கையை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர் தனது இரண்டு குழந்தைகளான சஞ்சய் ஜெயக்கொடி மற்றும் அமயா ஜெயக்கொடி ஆகியோருடன் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானமானமான UL 505 இல் இலங்கையை விட்டு வெளியேறியுள்ளார்.
கொள்ளுப்பிட்டியில் உள்ள ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட வீடு தீயில் எரிந்து நாசமான சம்பவம் தொடர்பில் கடந்த 20 ஆம் திகதி சனிக்கிழமை துலாஞ்சலி ஜெயக்கொடி குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அழைக்கப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.
ரணில் விக்கிரமசிங்கவின் கொள்ளுப்பிட்டியில் உள்ள தனியார் வீடு ஜூலை 9ஆம் திகதி வன்முறையாளர்களால் தீக்கிரையாக்கப்பட்டதுடன், பல பெறுமதியான புத்தகங்கள் மற்றும் ஏனைய சொத்துக்கள் அழிக்கப்பட்டன.
சம்பவத்தின் போது துலாஞ்சலி ஜெயக்கொடி அங்கு இருந்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில் குற்றப் புலனாய்வு திணைக்களம் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.