தண்ணீர் கட்டணமாக ஒரு கோடி கட்டாத 60 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ! 10 பேர் வீட்டு வாடகை செலுத்தவில்லை!
பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் திரு.எம்.எம்.பி.கே.மாயாதுன்னே, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி, அமைச்சர்களின் நிலுவைத் தொகையை பெற்றுக்கொடுக்க தலையிடுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். .
நீர், மின்சாரக் கட்டணம் மற்றும் வீட்டு வாடகை செலுத்துவதில் தவறிழைத்த அமைச்சர்கள் தொடர்பில் நாடாளுமன்றக் குழுக்களின் ஊடாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அந்தக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, எதிர்காலத்தில் இது தொடர்பில் பாராளுமன்றத்தின் சம்பந்தப்பட்ட பிரிவுகள் செயற்படும்.
நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் கூற்றுப்படி, நீர் கட்டணத்தை செலுத்த தவறிய அமைச்சர்களின் எண்ணிக்கை 60ஐ நெருங்குகிறது.
மேற்படி அமைச்சர்களிடம் இருந்து வாரியம் வசூலிக்க வேண்டிய தொகை ஒரு கோடி ரூபாய்க்கு மேல்.
இதனிடையே பத்து அமைச்சர்கள் தாங்கள் பயன்படுத்திய குடியிருப்புகளுக்கான வாடகையை செலுத்த தவறியுள்ளதாக அரச நிர்வாக அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த வீடுகளுக்கான வாடகைக் கொடுப்பனவுகளை அந்த அமைச்சர்கள் சம்பந்தப்பட்ட அமைச்சுக்களே மேற்கொள்ள வேண்டும்.
அமைச்சர்கள் ஆனாலும் மக்கள் ஆனாலும் அவரவர்களுக்கு என்று ஒரு வரை உண்டு அதற்குள் செலவுகள் செய்யவேண்டும்
மக்கள் இப்படி பணம் செலுத்தாவிட்டால் அரசு சும்மாவிடுமா அவமானப்படுத்தி விடுவார்கள்
அதேபோல் இந்த அரசியல்வாதி (குரங்குகளை) யும் அவமானப்படுத்த வேண்டும்