கலர் லைட் உள்ள சந்திகளில் முதற்கட்டமாக 14 சிசிரீவி பதிவு செய்யும் கமெராக்களை பொறுத்துவதற்கான நடவடிக்கை : ஆனோல்ட்

யாழ் மாநகர சபை, நல்லூர் பிரதேச சபை,மற்றும் கோப்பாய் பிரதேச சபைகளில் இருக்கின்ற வீதிப்போக்குவரத்து நடைமுறையில் உள்ள முக்கியமான கலர் லைட் உள்ள சந்திகளில் முதற்கட்டமாக 14 சிசிரீவி ஒளிப்படங்களை பதிவு செய்யும் கமெராக்களை பொறுத்துவதற்கான நடவடிக்கை முன்னெடுக்கயுள்ளதாக யாழ் மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் தெரிவித்தார்.
அண்மைய காலப்பகுதியில் யாழ் குடாநாட்டில் முக்கியமான சந்திகளில் வீதிப்போக்குவரத்து ஊடாக விபத்துக்கள் இடம்பெற்று வருகின்றது அந்த சம்பந்தமான விடையங்களில் வீதிப்போக்குவரத்து பொலிஸாரின் பணிப்பின் பெயரில் இவ் நடவடிக்கை முன்னெடுக்கயுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த கலர் லைட் பொறுத்தப்பட்ட கருவிகளில் ஊடாக சிசிரீவி கமெராவினை பொறுத்துவதற்கான நடவடிக்கை யாழ் மாநகர சபையின் உள்ளிட்ட வீதிகளுக்கு இந்த கமெராவினை பொறுத்துவதற்கு மாநகர சபை உறுப்பினர்களின் ஒத்துழைப்புக்கள் எவ்வாறு இருக்கின்றது என யாழ் மாநகர சபை முதல்வரினால் வினாவப்பட்டது அதற்காக உறுப்பினர்களின் பிரதி வாதங்களுடன் இத்தீர்மானம் சபையில் எகமானதாக நிறைவேற்றப்பட்டது
யாழ் மாநகர சபையின் மாதாந்த அமர்வு இன்று யாழ் மாநகர சபையின் முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் தலைமையில் இடம்பெற்றது.
இந்த அமர்வில் வீதிபோக்குவரத்து விபத்துக்களை குறைப்பதற்கான நடவடிக்கை தொடர்பாக கலந்துரையாடப்பட்டபோதே மாநகர முதல்வர் இவ்வாறு தெரிவித்தார்.