விமான சிநேகத்தில் கிடைத்த உயிர் பரிசு.
சவூதி அரேபியாவிலிருந்து வந்த விமானத்தில் நட்பாகிய ஒரு பெண் , அவரது இரண்டு வயது குழந்தையைப் பார்த்துக் கொள்வதற்காக அருகில் நட்போடு சினேகமானவரிடம் கொடுத்துவிட்டு மாயமாக தப்பிச் சென்றுள்ளதாக தகவலை களுத்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
களுத்துறை தெற்கு, போதிவத்தை பகுதியைச் சேர்ந்த எஸ். சாந்த அப்புஹாமி செய்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சவூதி அரேபியாவில் 11 வருடங்களாக பணிபுரிந்து 2 வயது ஆண் குழந்தை ஒன்றுடன் விமானத்தில் வந்த பெண்ணை விமானத்தில் அறிமுகமானதாகவும் , கட்டுநாயக்க விமான நிலையத்தில் தானும் களுத்துறைக்கு செல்ல விரும்புவதாக தெரிவித்ததனால் அதே டாக்ஸியில் அவளையும் குழந்தையையும் அழைத்துச் சென்றதாக பொலிஸாரிடம் புகார் அளித்தவர் தெரிவித்துள்ளார்.
களுத்துறை நகருக்கு வந்த போது குளிர்பான போத்தல் ஒன்றை எடுத்து வருவதாக கூறிவிட்டு குழந்தையை கவனித்துக் கொள்ளுமாறு வாகனத்தில் இருந்து இறங்கியவர் திரும்பி வரவில்லை என முறைப்பாட்டில் பதிவு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
களுத்துறை தெற்கு தலைமையக பொலிஸ் பரிசோதகர் சுனேத் சாந்தவின் பணிப்பில் , களுத்துறை தெற்கு பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் மகளிர் பணியக பொலிஸ் பரிசோதகர் நுவந்தி தலைமையில் விசாரணைகளை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறிய முடிகிறது.