ஜெனீவா: அரச அடக்குமுறைக்கு எதிராக இன்று (28) ஐரோப்பிய இலங்கையர்கள் ஆர்ப்பாட்டம்
இலங்கையில் மேற்கொள்ளப்படும் அரச அடக்குமுறைக்கு எதிராக இன்று ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக்கு முன்பாக ஐரோப்பிய இலங்கையர்கள் எதிர்ப்பு இயக்கத்தை ஏற்பாடு செய்துள்ளனர்.
ஜெனிவா நேரப்படி இன்று (28) முற்பகல் 11 மணி முதல் மதியம் 1 மணி வரை போராட்டம் நடத்தப்பட உள்ளது.
அடக்குமுறையை நிறுத்தவும், மக்களின் கருத்துக்கு எதிரான நாடாளுமன்றத்தைக் கலைக்கவும் என்ற தொனிப்பொருளில் இந்தப் போராட்டம் நடத்தப்படவுள்ளது.
இந்த போராட்ட இயக்கத்தின் முக்கிய நோக்கம் பயங்கரவாத ஒடுக்குமுறை சட்டத்தை பயன்படுத்தி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர் தலைவர்களை கைது செய்தல், செயற்பாட்டாளர்களை தடுத்து வைத்து விசாரணை செய்தல், செயற்பாட்டாளர்களை தொடர்ச்சியாக கைது செய்தல் என்பவற்றுக்கு எதிராக உலகிடம் நீதீ கேட்பதாகும்.
அரச அடக்குமுறைக்கு எதிரான இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள ஐரோப்பாவின் அனைத்து நாடுகளிலிருந்தும் மக்கள் ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரான்சில் உள்ள பிரான்ஸ் தூதரகத்திற்கு முன்பாக நேற்று கண்டனப் போராட்டம் ஒன்றும் நடத்தப்பட்டது.