சந்நிதியான் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்!

வரலாற்றுப் புகழ்பெற்ற தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
பிரதமகுரு சிவசிறி உலக குருநாதன் ஐயர் தலைமையில் நேற்றுப் பூஜைகள் இடம்பெற்று மாலை 4.30 மணியளவில் கொடியேற்றப்பட்டு பெருந்திருவிழா ஆரம்பமானது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இதில் கலந்துகொண்டனர்.
எதிர்வரும் 6ஆம் திகதி கைலாச வாகனமும், 8ஆம் திகதி சப்பரத் திருவிழாவும், 9ஆம் திகதி காலை 9 மணிக்கு தேர்த் திருவிழாவும் இடம்பெறவுள்ளன.
10ஆம் திகதி காலை தீர்த்தத் திருவிழாவும் அன்று மாலை 6 மணிக்கு மௌனத் திருவிழாவும், 11ஆம் திகதி பூக்காரர் பூஜையும் நடைபெறவுள்ளது.