ஏர் இந்தியா விமானம் அடுத்த மாதம் முதல் யாழ்ப்பாணத்துக்கு ….

பலாலியில் உள்ள யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்திற்கான விமான சேவையை எயார் இந்தியா நிறுவனம் அடுத்த மாதம் ஆரம்பிக்கவுள்ளது.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் (SLTDA) தலைவர் பிரியந்த பெர்னாண்டோ, வியாழன் அன்று நடைபெற்ற கூட்டத்தில், எயார் இந்தியா நிறுவனம் அடுத்த மாதம் முதல் வாரத்திற்கு இரண்டு முறை பலாலிக்கு விமானங்களை இயக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இந்த விமானம் 75-90 இருக்கைகள் கொண்ட கேரியர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.