இலங்கையின் அடக்குமுறைக்கு எதிராக ஜெனீவாவில் மாபெரும் ஆர்ப்பாட்டம்! (காணொளி)
அரசாங்கம் முன்னெடுத்துள்ள அடக்குமுறையை உடனடியாக நிறுத்துமாறு கோரி ஐரோப்பாவில் வாழும் இலங்கையர்கள் ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு முன்பாக இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக ஐரோப்பாவில் வாழும் இலங்கையர்கள் குழுவொன்று இன்று (28) பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் , அரசு அவசரகாலச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.
ரணில்-ராஜபக்ஷவின் நெறிமுறையற்ற மற்றும் ஆணை பறிக்கப்பட்ட அரசாங்கம் , மக்களை நசுக்குவதற்கு எதிராகவும் , தற்போதைய நாடாளுமன்றத்தைக் கலைத்து புதிய தேர்தலை நடத்தக் கோரியும் இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மின்சாரத் தடை, எரிபொருள், எரிவாயு, மருந்துப் பற்றாக்குறை, அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் போன்றவற்றால் இலங்கை மக்கள் எதிர்நோக்கும் சவாலான சூழ்நிலை காரணமாக, சுதந்திரமாக ஒன்று கூடுவதே பொதுமக்களின் விருப்பமாகும்.
பாதிக்கப்பட்ட மக்களின் அடிப்படை உரிமைகளான வெளிப்பாடு மற்றும் வெளியீடு, கைது செய்தல் மற்றும் ஊடக தணிக்கை, அமைதியாக சுதந்திரமாக ஒன்றுகூடுவதற்கான உரிமை மற்றும் அனைத்து பிரஜைகளின் ஜனநாயக உரிமைகளையும் உறுதிப்படுத்துமாறு இலங்கை அதிகாரிகளை தாங்கள் கடுமையாக வலியுறுத்துவதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
அதன் வீடியோ காட்சி கீழே