வடக்கில் 3109 பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு

ஐம்பதாயிரம் பட்டதாரிகளை அரச வேலைவாய்ப்பிற்குள் உள்வாங்குவதற்கான நியமனங்களுக்காக வடக்கிலிருந்து 5572 பட்டதாரிகள் விண்ணப்பித்திருந்த நிலையில் அவர்களில் 3109 பட்டதாரிகளின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. 2346 பட்டதாரிகளின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. 117 பட்டதாரிகளின் விண்ணப்பங்கள் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளன.

யாழ் மாவட்டத்தில் இருந்து 3460 பட்டதாரிகள் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 1897 பட்டதாரிகளின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளன. 1506 பட்டதாரிகளின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அதுபோல் 57 பட்டதாரிகளின் விண்ணப்பங்கள் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது.

களிநொச்சி மாவட்டத்தில் இருந்து 413 பட்டதாரிகள் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 267 பட்டதாரிகளின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளன. 127 பட்டதாரிகளின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அதுபோல் 19 பட்டதாரிகளின் விண்ணப்பங்கள் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து 344 பட்டதாரிகள் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 233 பட்டதாரிகளின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளன. 101பட்டதாரிகளின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அதுபோல் 10பட்டதாரிகளின் விண்ணப்பங்கள் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளன.

வவுனியா மாவட்டத்தில் இருந்து 658 பட்டதாரிகள் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 338 பட்டதாரிகளின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளன. 256 பட்டதாரிகளின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அதுபோல் 19 பட்டதாரிகளின் விண்ணப்பங்கள் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளன.

மன்னார் மாவட்டத்தில் இருந்து 697 பட்டதாரிகள் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 329 பட்டதாரிகளின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளன. 356 பட்டதாரிகளின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அதுபோல் 12 பட்டதாரிகளின் விண்ணப்பங்கள் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளன.

ஐம்பதாயிரம் பட்டதாரி நியமனங்களுக்காக நாடளாவிய ரீதியில்  90129 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 49050 பட்டதாரிகளின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. 40092 பட்டதாரிகளின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.987 பட்டதாரிகளின் விண்ணப்பங்கள் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

Leave A Reply

Your email address will not be published.