மூத்த ஒளிப்பதிவாளர் டொனால்ட் கருணாரத்ன மறைந்தார்.
விருது பெற்ற மூத்த ஒளிப்பதிவாளர் டொனால்ட் கருணாரத்ன நேற்று (28) அமெரிக்காவில் காலமானார்.
நீண்டகால நோயின் பின்னர் மறைந்த அவருக்கு வயது 78.
இந்நாட்டில் பிறந்த சிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான இவர், லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் தர்மசேன பத்திராஜா வசந்த ஒபேசேகர சுமித்ரா பீரிஸ் உட்பட இலங்கையின் தலைசிறந்த இயக்குனர்களின் திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர்.
இலங்கை நேரப்படி நேற்று பிற்பகல் 2 மணியளவில் அவர் உயிரிழந்துள்ளார்.
அவரது இறுதி காலங்களில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசித்து வந்தார்.
65 படங்களுக்கு மேல் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய டொனால்ட் , சரசவிய, ஸ்வர்ண சங்க, ஜனாதிபதி , ஓ.சி.ஐ.சி., உட்பட இலங்கையின் அனைத்து வகையான விருதுகளையும் பெற்ற சிறந்த ஒளிப்பதிவாளராவார்.
சிறந்த ஒளிப்பதிவுக்காக அவர் 19 முறை பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார், இது இலங்கையில் சாதனையாக உள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டு ஜனாதிபதி விருது வழங்கும் விழாவில் அவருக்கு சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
“அஹஸ் கவ்வ”, “கங்காஅத்தர”, “கருமக்காரயோ”, “யாழு யெஹெலி”, “மலட்டா நொயென பம்பரு”, “தடையம”, “மாயா”, “கிறிஸ்து சரித்தய”, “பொரண்துவ” போன்ற பல சிறந்த படங்களில் கேமராவை இயக்கியவர். .
டொனால்ட் கருணாரத்னவின் இறுதிச் சடங்குகள் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ளது.