எந்தப் பிரேரணை வந்தாலும் இலங்கைக்கு சவால் இல்லை – பிரதமர் தினேஷ் உறுதி.
ஜெனிவா அமர்வில் இலங்கைக்கு எதிராக எத்தகைய பிரேரணைகள் வந்தாலும் அது சவாலாக அமையாது என்று பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
ஜெனிவா அமர்வு இம்முறை இலங்கைக்குச் சவாலாக அமையாது என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்த நிலையில், பிரதமரும் அதையொத்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
“ஜெனிவாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கையின் நிலைப்பாட்டை அரசு சமர்ப்பிக்கும். இந்த மாநாடு இலங்கைக்குச் சவாலாக அமையாது என்றே நாம் கருதுகின்றோம். இலங்கை தொடர்பில் என்ன பிரேரணை வந்தாலும் அதனை அரசு எதிர்கொள்ளத் தயாராகவுள்ளது” – என்று பிரதமர் தினேஷ் குணவர்த்தன மேலும் கூறியுள்ளார்.