அனர்த்த அபாயக் குறைப்பு திட்டம் தொடர்பான கலந்துரையாடல்.

மாவட்ட மட்டத்தில் அனர்த்த அபாயத்தைக் குறைக்கும் முகமாக SOND நிறுவனத்தால் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டிசுட்டான், துணுக்காய், மாந்தை கிழக்கு ஆகிய மூன்று பிரதேச செயலகங்களில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள அனர்த்த அபாயக் குறைப்புத் திட்டத்திற்கான இரண்டாவது கலந்துரையாடலானது இன்று 25.08.2020 செவ்வாய் கிழமை  மு.ப 09.30மணிக்கு மாவட்ட செயலாளர் க.விமலநாதன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றுள்ளது.

மேற்படி திட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள பிரதேச செயலகங்களில் வளவாளர் குழுவொன்றினை உருவாக்கி அவர்களுக்கு மூன்று நாட்கள் பயிற்சியளித்தல், தெரிவு செய்யப்பட்ட ஒன்பது கிராமங்களுக்கான முன்திட்டமொழிவொன்றை உருவாக்குதல், கிராம மட்டங்களில் உருவாக்கப்பட்ட முன்மொழிவுகளை பிரதேச மட்டத்திற்குரியதாக ஒருங்கிணைத்தல் ஊடாக இச் செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஒருங்கிணைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இக் கலந்துரையாடலில் SOND நிறுவன பணிப்பாளர், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர், தெரிவு செய்யப்பட்ட பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளர்கள், உதவி திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச சபை செயலாளர்கள், தவிசாளர்கள், அனர்த்த நிவாரண சேவை உத்தியோகத்தர்கள், கிராம சேவகர்கள், சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொதுச்சுகாதார உத்தியோகத்தர்கள் என பல தரப்பட்டோர் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.