இடுக்கியில் நிலச்சரிவு.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலியான சோகம்
கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மாவட்டத்தில் தொடுபுழா அருகே குடையத்தூர் பகுதியில் இன்று அதிகாலை மூன்றரை மணி அளவில் ஏற்பட்ட நிலச்சரிவில் அந்த பகுதியில் உள்ள சோமன் என்பவரது வீடு முற்றிலும் சேதமடைந்து அடித்து செல்லப்பட்டு மண்ணில் புதைந்து.
வீட்டில் தூங்கி கொண்டிருந்த சோமன், அவரது தாயார் தங்கம்மா, மனைவி ஷிஜி, மகள் ஷிமா, பேரன் தேவானநத் ஆகிய ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் மாயமான நிலையில் மீட்பு குழுவினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். சுமார் 8 மணிநேரம் மேற்கொண்ட மீட்பு பணியில் 5 பேரின் உடல்களையும் மீட்டனர்.
அந்த பகுதியில் உள்ள நான்கு குடும்பங்களை தாற்காலிக முகாமில் சேர்த்தனர். கேரளா வருவாய் அமைச்சர் கே. ராஜன் சம்பவ இடத்தில் முகாம் இட்டுள்ளார். மேலும் தொடுபுழா – புளியம்மல சாலையில் இன்று முதல் இரவு நேர பயணத்திற்கு தடை விதித்துள்ளன.