ஶ்ரீலங்கன் விமான நிறுவன 49% பங்குகளை விற்க நிமல் சிறிபால முடிவு!
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் 51% பங்குகளை தக்கவைத்துக்கொண்டு எஞ்சிய 49% பங்குகளை வெளிநாட்டு முதலீட்டாளர் ஒருவருக்கு விற்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
இலங்கையின் கேட்டரிங் நிறுவனத்தின் பங்குகள் மற்றும் அதன் நிர்வாகத்தில் 49% மற்றும் விமான நிலைய நடவடிக்கைகள் மற்றும் நிர்வாகத்தின் 49% முதலீட்டாளருக்கு வழங்குவதற்கான முன்மொழிவுகளை கோருவதற்கு தீர்மானித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கன் விமான சேவையை மறுசீரமைப்பது தொடர்பில் சம்பந்தப்பட்ட அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கன் விமான சேவையின் மொத்த கடன் தொகை 1.126 பில்லியன் டொலர்கள் அதாவது 401 பில்லியன் ரூபா என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மின்சார சபை மற்றும் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தை மறுசீரமைக்கவுள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர முன்னர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.