ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொண்ட 27 பேர் கைது (Video) – Update

கொழும்பில் இன்று பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் தலைமையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொண்ட 27 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

மருதானை எல்பின்ஸ்டோன் திரையரங்கிற்கு அருகாமையில் ஆரம்பமான பேரணியில் பல்கலைக்கழக மாணவர்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் பல வெகுஜன அமைப்புகளின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

குறித்த குழுவினர் பாதயாத்திரையாக மருதானை தொழில்நுட்ப சந்திக்கு அருகில் வந்த போது பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரைகளை பிரயோகித்து குழுவினரை கலைத்தனர்.

கண்ணீர் புகை மற்றும் நீர் தாக்குதல்களுக்கு மத்தியில், கொழும்பு நகர மண்டபத்தை நோக்கி பேரணியாகச் சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள், சுகாதார அமைச்சின் முன்பாக மீண்டும் பொலிஸாரால் இடைநிறுத்தப்பட்டனர்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் அடக்குமுறைகளை நிறுத்தக் கோரியும் கைது செய்யப்பட்ட செயற்பாட்டாளர்களை விடுவிக்கக் கோரியும் இந்த ஆர்ப்பாட்டப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


பால் குடி குழந்தையுள்ள தாய் ஒருவரையும் , இரு கால்களையும் இழந்த முன்னால் இராணுவ வீரர் ஒருவரையும் கைது செய்த போது….

Leave A Reply

Your email address will not be published.