விவசாயிகளை விட மகிந்தவுக்கு வீடு முக்கியமா எனும் சர்ச்சையில் சூடான ரணில் ,விதவை என பேசி மூக்குடைபட்டார் (Video)
650 மில்லியன் விவசாயக் கடனைக் குறைக்க 2 வருடங்கள் எடுத்துக் கொண்ட அரசாங்கம், மகிந்தவின் வீட்டைச் சீரமைக்க ஒரே நாளில் 400 மில்லியனைக் அனுமதித்தது! அனுராபுரத்தின் ரோஹண பாராளுமன்றத்தில் முறையீடு! அதைக் கேட்டு வெளியில் இருந்து ஓடி வந்த ஜனாதிபதி பதில்! முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் விதவைகள் பற்றி பேசி பாராளுமன்றத்தில் எதிர்ப்பு கோசம்!
250 மில்லியன் விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்வதற்கு இரண்டு வருடங்களுக்கும் மேலாக எடுத்துக் கொண்ட அரசாங்கம், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ வீட்டை புனரமைக்க ஒரே நாளில் 400 மில்லியன் ரூபாவை அனுமதித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹன பண்டார பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அதைக் கேட்டு, உடனடியாக நாடாளுமன்ற வளாகத்திற்கு ஓடி வந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க , முன்னாள் ஜனாதிபதிகள் மட்டுமன்றி, ஜனாதிபதிகளின் விதவைகளும் அரசாங்கத்தினால் பராமரிக்கப்படுகிறார்கள் எனத் தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க , இப்படி பேசியதும் சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிர்ப்பு தெரிவித்து கூக்குரலிட்டனர்.
விதவையை கவனித்துக்கொண்டதற்காக அனைத்து பெண்களையும் தகாத முறையில் அவமதித்த ஜனாதிபதி! அவர் இறந்த அன்று ரணிலின் மனைவியும் விதவையாவார்! அதை அவர் உணரவில்லை இல்லை என பதில் தாக்குதல் கொடுத்த அப்புகாமி.
சஜித் பிரேமதாசவின் தாயார் திருமதி ஹேமா பிரேமதாசவை அவமதிக்கும் வகையில் ரணில் விக்ரமசிங்க கருத்து வெளியிட்டுள்ளதாக சமகி ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி இன்று (31) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் அறிக்கையின் ஊடாக நாட்டின் ஒட்டுமொத்த பெண் சந்ததியினரும் அவமானப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்ததோடு , ரணில் இறந்தால் , அவரது மனைவியும் விதைவையாவார் என ரணில் மறந்து விட்டார் என பதிலடி கொடுத்தார்.