தோல்வி பயத்தால் கோப்ரா படக்குழு எடுத்த முடிவு..
இன்று சியான் விக்ரமின் கோப்ரா திரைப்படம் ரிலீஸ் ஆகி, ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. நெகடிவ் விமர்சனங்கள் கொஞ்சம் அதிகம் இருப்பதால் படக்குழு இப்போது திடீரென்று ஒரு முடிவு எடுத்து இருக்கிறார்கள்.
‘டிமான்டி காலனி’, ‘இமைக்கா நொடிகள்’ போன்ற த்ரில்லர் படங்களை எடுத்த அஜய் ஞானமுத்து இந்த படத்தையும் இயக்கியுள்ளார். தன்னுடைய கடைசி இரண்டு படங்களுக்கு ஈடு கொடுக்கும் அளவிற்கு இந்த படத்திற்கும் கடின உழைப்பை போட்டு இருக்கிறார்.
பொதுவாக ஒரு படம் இரண்டரை மணி நேரத்திற்கு அதிகம் சென்றாலே மிக நீளமான படம் என்று சொல்கிறார்கள். அப்படியிருக்கும் போது இந்த படத்தின் மொத்த காட்சி நேரம் மூன்று மணி நேரம். ஒரு வேளை நீண்ட நேரம் தான் படத்தின் நெகட்டிவ் விமர்சனங்களுக்கு காரணமாக இருக்கலாம் என்பதால் படக்குழு இப்போது 30 நிமிடங்களை குறைக்கலாம் என முடிவு எடுத்திருக்கிறது.
இருமுகன் படத்திற்கு பிறகு விக்ரமுக்கு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பெரிய படங்கள் ஏதும் அமையவில்லை. ஸ்கெட்ச், சாமி 2 படங்கள் வெற்றியடையவில்லை. கிட்டத்தட்ட 3 வருடங்களுக்கு பின் மகான் படமும் OTT ரிலீஸ். எனவே 2019 க்கு பிறகு விக்ரமுக்கு தியேட்டர் ரிலீஸ் என்றால் அது கோப்ரா தான்.
விக்ரம், மிர்னாலினி ரவி, ஸ்ரீநிதி ஷெட்டி , இர்ஃபான் பதான் இந்த படத்தில் நடித்திருக்கின்றனர். ஒரு கணக்கு வாத்தியார் கணிதவியல் நுணுக்கங்களை பயன்படுத்தி உலக தலைவர்களை கொலை செய்வது, அதை மைய்யபடுத்தின கதை நகர்வுதான் கோப்ரா.
எப்படிப்பட்ட த்ரில்லராக இருந்தாலும், டிவிஸ்ட் இருந்தாலும் ரொம்ப நேரம் காட்சிகள் இருப்பதால் கூட ஒரு சலிப்பு ஏற்பட வாய்ப்பிருப்பதை உணர்ந்த படக்குழு இப்போது பட நேரத்தை குறைப்பதற்கான வேலைகளில் இறங்கியிருப்பதாக தெரிகிறது.