“நாங்கள் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களோடு இருக்கிறோம்” ஜூலியா சுங்.
இலங்கைக்காக அமெரிக்கத் தூதுவர் ஜூலியா சுங் தனது டுவிட்டர் பதிவில், பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில், “நாங்கள் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் சார்பாக நிற்பதோடு, சிவில் சமூக தனிநபர்கள் மற்றும் குழுக்களின் முயற்சிகளைப் பாராட்டுகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
அவர் தனது ட்வீட்டில், 2022 ஆம் ஆண்டு நினைவு கூரும் வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சர்வதேச தினமான இன்று, இலங்கையர்கள் வெளிப்படைத்தன்மை மற்றும் அவர்களின் அன்புக்குரியவர்களின் தலைவிதி குறித்த அரசாங்கத்திலுள்ள தகுதியானவர்களது பதில்கள் தேவை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தங்கள் அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியாததால் எத்தனையோ குடும்பங்கள் மற்றும் சமூகங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்பதை நினைவூட்டியுள்ளார்.
வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சர்வதேச தினம், உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. வலுக்கட்டாயமாக காணாமல் போதல்களைத் தடுப்பதன் முக்கியத்துவத்தை இந்த நாள் வலியுறுத்துவதோடு , இந்த கொடூரமான குற்றத்திற்கான தண்டனையிலிருந்து விலக்கப்படுவதை எதிர்த்துப் போராடும் நாள் இது எனக் குறிப்பிட்டுள்ளார்.