ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தினுள் சுடப்பட்டு இறந்த பெண்ணின் உடல் (Video)

கேகாலை ஐக்கிய மக்கள் சக்தி ஆசன அமைப்பாளர் அலுவலகத்தில் பெண் ஊழியர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
அந்த அலுவலகத்துக்குள் 36 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட அமைப்பாளர் லக்ஸ்மன் திசாநாயக்க சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்
உயிரிழந்த பெண் இன்று காலை கட்சி அலுவலகத்துக்கு சென்றுள்ளமை பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. குறித்த பெண் கட்சி அலுவலகத்தில் நீண்ட நாட்களாக சேவையாற்றியவர் எனவும் , இன்று காலை கட்சி அமைப்பாளர் குறித்த பெண்ணின் வீட்டுக்கு சென்று அவரை அழைத்து சென்றமை தெரியவந்ததாகவும், அதனடிப்படையில் ஏற்பட்ட சந்தேகங்கள் மற்றும் சான்றுகளை மையப்படுத்தி கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாகவும் கூறும் பொலிஸார், ஆரம்பகட்ட விசாரணைகளை நடத்தி வருகின்றர்.
இது கொலையா அல்லது தற்கொலையா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.