எவரையும் வெளியேற்றும் அதிகாரம் சுதந்திரக் கட்சி தலைவருக்கு!
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியலமைப்பை திருத்துவதற்கு பெரும்பான்மை இணக்கம் கிடைத்துள்ளது.
அதாவது கட்சியின் கொள்கைகளுக்கும் ஒழுக்கத்துக்கும் பங்கம் விளைவிக்கும் வகையில் செயற்படுபவர்களை அவர்களின் பதவிகளிலிருந்தும் , உறுப்பினர் அங்கத்துவத்திலிருந்தும் நீக்குவதற்கு மத்திய குழு மற்றும் கட்சி தலைவருக்கு அதிகாரம் வழங்குவது தொடர்பாகவே கட்சி குழு கூடி முடிவெடுத்தது.
கட்சியின் அங்கீகாரத்திற்கு மாறாக அரசாங்கத்தின் அமைச்சுப் பதவிகளை கைப்பற்றி பதவியேற்கவுள்ள இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்களை தோற்கடிக்கும் குறுகிய நோக்கத்துடன் இந்த அரசியலமைப்பு திருத்தம் முன்வைக்கப்பட்டுள்ளதாக கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், இன்றைய மத்திய குழுக் கூட்டத்தில், கட்சியின் அரசியலமைப்பின் சில சரத்துகளை திருத்தியமைத்து கட்சித் தலைவருக்கு வரம்பற்ற அதிகாரங்களை வழங்கியதாக முன்னாள் அமைச்சரும் சட்டத்தரணியுமான பைசர் முஸ்தபா, மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.