நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவையை தொடர்ந்தும் நீடிக்க ரணில் முடிவு!
தற்போது நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவையை தொடர்ந்தும் நீடிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமைச்சரவை பதவிப் பிரமாணம் செய்யும் போது அது 2 வாரங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படும் எனவும் ஏனைய கட்சிகளின் பிரதிநிதிகளும் அமைச்சரவையில் இடம்பெறுவார்கள் எனவும் முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பிளவுபடுத்தி பாராளுமன்ற உறுப்பினர்களை அரசாங்கத்திற்குள் கொண்டு வந்து, அவர்களுக்கும் கெபினட் அமைச்சரவை பதவிகளை வழங்க ஜனாதிபதி திட்டமிட்டிருந்தார்.
ஆனால் ஒரு மாதத்துக்கும் மேலாக முயற்சித்தும் இரண்டு கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதியால் பிளவுபடுத்தி தன்வசப்படுத்த முடியவில்லை.
எவ்வாறாயினும், அந்த முயற்சியை மேலும் தொடரும் நோக்கில் தற்போதைய அமைச்சரவையையே தற்போதைக்கு தொடர ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆணை உள்ள அரசொன்றால் மட்டுமே அரசியல் சீர்திருத்தங்களை மேற்கொள்ள முடியும் என்றும், IMF நிதியில் இருந்து பணத்தைப் பெறுவதற்கு அரசியல் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் IMF இன் தலைவர் நேற்று வலியுறுத்தியிருந்தார்.