துப்பாக்கி செயல்படாததால் அர்ஜென்டினாவின் துணை ஜனாதிபதி உயிர் தப்பினார் (வீடியோ)
அர்ஜென்டினாவின் துணை அதிபர் கிறிஸ்டினா பெர்னாண்டசை துப்பாக்கியால் கொலை செய்ய எடுத்த முயற்சி தோல்வியடைந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணையில் கலந்து கொண்டு திரும்பிக் கொண்டிருந்த குடியரசுத் துணைத் தலைவரின் ஆதரவாளர் ஒருவர், அவரது முகத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்.
துப்பாக்கியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அது வேலை செய்யவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் செய்தி வெளியிட்டுள்ளன.
தாக்குதலுக்கு முயற்சித்த நபர் 35 வயதுடைய பிரேசிலைச் சேர்ந்தவர் என்பதுடன் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், இந்தச் செயலுக்கான அடிப்படைக் காரணத்தைக் கண்டறிய போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
ஊழல் வழக்கு விசாரணையில் கலந்து கொண்டு திரும்பிக் கொண்டிருந்த துணை ஜனாதிபதி இந்த எதிர்பாராத சூழ்நிலையை சந்திக்க நேரிட்டது.
கிறிஸ்டினா பெர்னாண்டஸ் 2007-2015 வரை அர்ஜென்டினாவின் அதிபராக பணியாற்றினார்.
அந்த நேரத்தில், நாட்டின் பட்டகோனியா பகுதியில் செய்யப்பட்ட ஒப்பந்த வேலையில் மோசடி செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், 69 வயதான துணை ஜனாதிபதிக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
ஆனால், வழக்கு விசாரணையின்போதும் அவருக்கு ஆதரவாக அவரது வீட்டின் முன்பு ஆதரவாளர்கள் குவிந்துள்ளனர்.
இந்த நிகழ்வை வெளிநாட்டு ஊடகங்கள் எவ்வாறு செய்தி வெளியிட்டன என்பதை கீழே காணலாம்