வரவு செலவுத் திட்டத்திற்கு கை தூக்கியவர்களுக்கு இராஜாங்க அமைச்சு பதவி.

வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே, ஜயரத்ன ஹேரத், ஜோன் செனவிரத்ன மற்றும் குமார வெல்கம ஆகியோர் இராஜாங்க அமைச்சர்களாக நியமிக்கப்படவுள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி எதிர்வரும் 9ஆம் திகதி இக்குழுவினர் இராஜாங்க அமைச்சர்கள் பதவிகளில் சத்தியப்பிரமாணம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.