காது கேளாத சாரதிகளை அடையாளம் காண, சின்னம் வழங்கும் நிகழ்வு யாழில்…..

யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் விது நம்பிக்கை நிதியத்தின் அனுசரணையில், வாகனங்களை செலுத்தும் செவிப்புலன் வலுவற்றவர்களை (காது கேளாதோரை) பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அறிந்து கொள்ளுவதற்கான, அடையாளச் சின்னம் வழங்கும் நிகழ்வு , யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இன்று (02.09.2022) காலை 9.30 மணிக்கு மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் செவிப்புலன்வலுவற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாளச் சின்னம் வெளியிட்டு வைக்கப்பட்டதுடன், மாற்றுத்திறனாளிகளுக்கு அரசாங்கம் பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபட்டுவருகின்றமை தொடர்பாகவும் அதன் பொருட்டு விது நம்பிக்கை நிதியத்தின் முழுமையான பங்களிப்புடன் இவ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ் அடையாளச் சின்னத்தை செவிப்புலன் வலுவற்றோர் (காது கேளாத சாரதிகளது) வாகனங்களில் பொருத்துவதற்கான நோக்கமானது, போக்குவரத்தில் ஈடுபடும் சாதாரண பொதுமக்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் , மற்றும் சாரதிகளுக்கு, வாகனங்களை செலுத்தும் காது கேளாத சாரதிகள் குறித்து அறிவுறுத்துவதற்காகவேயாகும்.

சாதாரணமான ஒரு சாரதி செலுத்தும் வாகனத்துக்கு முன்னால் அல்லது பின்னால் பயணிக்கும் வாகனத்தை செலுத்துபவர் எப்படியானவர் என அடையாளப்படுத்த இந்த சின்னம் பெரிதும் உதவியாக இருக்கும்.
இது விபத்துகளை தவிர்க்க பெரிதும் உதவும்.

இவ் விழிப்புணர்வு நடவடிக்கையானது இலங்கையில் முதற்கட்டமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் அறிமுகப்படுத்தப்படுவதோடு, ஏனைய மாவட்டங்களிலும் அறிகப்படுத்தப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர், மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர், மாகாண போக்குவரத்து ஆணையாளர், யாழ்.மாவட்ட மோட்டார் போக்குவரத்து திணைக்கள உதவி ஆணையாளர் உட்பட நிகழ்வின் ஏற்பாட்டாளர்களும் அனுசரணையாளர்களுமான விது நம்பிக்கை நிதியத்தின் பணிப்பாளர், இணைப்பாளர்களும் யாழ்மாவட்டத்தில் கடமையில் ஈடுபடும் தெரிவு செய்யபட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள், மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள், செவிப்புலன் வலுவற்றோர் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

 

 

Leave A Reply

Your email address will not be published.