கோட்டாவுக்குத் தேவையான வசதியை வழங்கத் தீர்மானம் ஜனாதிபதியின் செயலாளர் தெரிவிப்பு.

முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கு வழங்கப்படும் சிறப்புரிமைகளின் கீழ் கோட்டாபய ராஜபக்சவுக்குத் தேவையான வசதிகள் வழங்கப்படும் என்று ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேற்றிரவு நள்ளிரவு நாடு திரும்பினார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துரைக்கும்போதே ஜனாதிபதியின் செயலாளர் மேற்கண்டவாறு கூறினார்.