காயம் காரணமாக டி20 உலக கோப்பை தொடரில் இருந்து ஜடேஜா விலகல்.
இந்திய அணியின் ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா ஆசிய கோப்பையில் விளையாடி வந்தார். முழங்காலில் ஏற்பட்ட காயத்தால் அவர் ஆசிய கோப்பை தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக அக்சர் படேலை பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்நிலையில், ரவீந்திர ஜடேஜாவுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டதில் காயத்தின் அளவு அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் அவர் முழங்கால் அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளார்.
அறுவை சிகிச்சைக்கு பிறகு அவர் காயத்தில் இருந்து மீண்டு வர மூன்றிலிருந்து ஆறு மாதங்கள் ஆகும் என தெரியவந்துள்ளது. மேலும், சர்வதேச போட்டியில் விளையாடுவதற்கு முன்பு போதிய காலம் தேவைப்படும் என்பதால், அக்டோபரில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலக கோப்பை தொடரில் விளையாடமாட்டார் என தெரிய வந்துள்ளது. ஜடேஜா டி20 உலக கோப்பையில் விளையாட முடியாதது இந்திய அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.