இந்தியாவின் ஒத்துழைப்பை ரஷ்யா கோரியுள்ளது.

ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகமும், கமலேயா தொற்று நோயியல் மற்றும் நுண்ணுயிரியல் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து கண்டறிந்துள்ள தடுப்பூசிக்கு ஸ்புட்னிக்-v எனவும் பெயரிட்டுள்ளது. அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் கடந்த 11-ந் தேதி அறிவித்தார்.

இரண்டு கட்டமாக பரிசோதனை நடத்தியுள்ள ரஷ்யா 3-வது கட்ட பரிசோதனை நடத்தவில்லை. இந்நிலையில் ஸ்புட்னிக் -v தடுப்பூசியை உற்பத்தி செய்வதற்கும், 3-வது கட்ட மருத்துவ பரிசோதனையை இந்தியாவில் நடத்தவும் இந்தியாவின் ஒத்துழைப்பை ரஷ்யா கோரியுள்ளது. இரு நாடுகளும் இதுதொடர்பாக தொடர்பு கொண்டிருப்பதாகவும், சில தகவல்கள் பரிமாறப்பட்டிருப்பதாகவும் சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷண் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.