தகுதியானவர்கள் வடக்கில் இருக்க பணிப்பாளராக சிங்களவர் ஏன்? – நியமனத்தை மறுபரிசீலனை செய்யுமாறு கோரி ஜனாதிபதிக்கு கடிதம்.

வடக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளராக மருத்துவர் திலிப் லியகனே நியமிக்கப்பட்டதை மீள் பரிசீலனை செய்யுமாறு தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அவசர கடிதம் அனுப்பியுள்ளார்.
வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் பதவிக்கு வடக்கு மாகாணத்தில் தகுதியானவர்கள் இருக்கும் நிலையில் வெளிமாகாணங்களில் இருந்து நியமிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று அந்தக் கடிதத்தில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தகுதியான சுகாதாரப் பணிப்பாளர் ஒருவரை வடக்கில் இருந்தே தெரிவு செய்யுமாறு அவர் தனது கடிதத்தில் குறிப்பிடுள்ளதுடன் வழங்கப்பட்ட நியமனத்தை மீள் பரிசீலனை செய்யுமாறும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைக் கேட்டுக்கொண்டுள்ளார்.