சந்திரிகா ஆதரவோடு புதிய ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஆரம்பித்த குமார வெல்கம….
நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தலைமையில் ‘புதிய ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்’ கட்சியின் தலைமையகம் இன்று (05) காலை பத்தரமுல்லையில் திறந்து வைக்கப்பட்டது.
பிரதான அலுவலகம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.
தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள ‘புதிய லங்கா சுதந்திரக் கட்சி’யின் பிரதித் தலைவராக முன்னாள் அமைச்சர் ஜீவன் குமாரணதுங்கவும், பொதுச் செயலாளராக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் திலக் வரகொடவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மைத்திரிபால சிறிசேன மற்றும் செயலாளர் தயாசிறி ஜயசேகர ஆகியோருடன் முரண்பட்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எம்.பி.க்கள் பலர் எதிர்காலத்தில் ‘புதிய ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி’யில் இணைவதற்கான பேச்சுவார்த்தைகளை இப்போதே ஆரம்பித்துள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீவிர வலதுசாரி அல்லது தீவிர இடதுசாரி அரசியல் நடைமுறைகளுக்கு எதிரான தீவிர மத்தியக் கொள்கையின் அடிப்படையில் எதிர்கால அரசியல் நடவடிக்கைகளைத் திட்டமிடுவதற்கு ‘புதிய ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி’ உழைக்கும்,
மேலும் அந்த நிலைப்பாட்டில் இருந்து பல அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்களுடனும் நீண்ட கலந்துரையாடல்கள் நடத்தப்படவுள்ளதாகவும் , கடந்த சில வாரங்களாக அரகலய போராட்டத்தில் பங்களித்த இளம் ஆர்வலர்களோடு கட்சி நீண்ட பேச்சுவார்த்தைகளை நடத்தியதாக , அந்தக் கட்சியின் தலைவர் ஒருவர் கூறினார்.