பிரித்தானிய பிரதமர் ரிஷியா அல்லது லிசாவா? – இறுதி முடிவு இன்று!
பிரித்தானியாவின் பிரதமர் யார் என்பது குறித்த இறுதி முடிவு இன்று அறிவிக்கப்படவுள்ளது.
புதிய பிரதமர் இன்று யார் என அறிவிக்கப்பட்ட பின்னர் , நாளைய தினம் தேர்வாகும் புதிய பிரதமர் , எலிசபெத் மகாராணியார் முன்னிலையில் பதவியேற்பார்.
ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியை வழிநடத்துபவர் பிரதமர் பதவியை ஏற்கவுள்ள நிலையில் கட்சித் தலைமைக்கான தேர்வு பல கட்டங்களாக நடைபெற்றது. இரண்டு இறுதிப் போட்டியாளர்களாக முன்னாள் நிதி அமைச்சர் ரிஷி சுனக் மற்றும் தற்போதைய வெளியுறவு அமைச்சர் லிசா ட்ரஸ் உள்ளனர்.
அந்நாட்டின் ஊடக அறிக்கைகளின்படி, ரிஷி சுனக் முதல் சுற்றுகளில் முன்னிலையில் இருந்தார், ஆனால் இப்போது லிசா ட்ரஸ் அவரை முறியடிக்க முடிந்துள்ளதாகவும் , அதன்படி, லிசா டிரஸ் பிரதமராகலாம் எனவும் ஊகங்களின் மூலம் தெரியவருகிறது.
பொதுமக்களின் நம்பிக்கையைப் பேணத் தவறியதாலும், பொருளாதார நெருக்கடிக்கு போதுமான தீர்வுகளை வழங்கத் தவறியதாலும் போரிஸ் ஜான்சன் , பிரதமர் பதவியை ராஜினாமா செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டார்.