மனைவியைக் கழுத்தறுத்துப் படுகொலைசெய்த கொடூர கணவன்!

கணவன் தனது மனைவியை கழுத்தறுத்துப் படுகொலை செய்துள்ளார்.
இந்தக் கொடூர சம்பவம் தம்புள்ளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டவெல பிரதேசத்தில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது எனப் பொலிஸ் ஊடகப்பிரிவு இன்று தெரிவித்துள்ளது.
கொட்டவெல பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதான கீதா குமாரி கருணாதிலக என்பவரே உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் கடந்த 31ஆம் திகதி வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பி தாய் வீட்டில் இருந்தபோது கணவனால் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இருவருக்கும் இடையில் நீண்டகாலமாக நிலவி வந்த குடும்பத் தகராறு காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றுள்ளது என்று தம்புள்ளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் இடம்பெற்ற இடத்தில் சடலம் பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்த நிலையில் நீதிவான் விசாரணை இன்று காலை இடம்பெற்றது.
கொலையைச் செய்த சந்தேகநபர் தற்போது பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைத் தம்புள்ளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.