முடிவுகள் எட்டப்படாமல் முடிவுற்ற செயற்குழு கூட்டம்

தேசிய பட்டியல் ஆசனம் மற்றும் கட்சி தலைமை குறித்து முடிவு எடுப்பதற்காக கூடிய ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டம் ஒரு முடிவும் எட்டப்படாமல் முடிவுற்றுள்ளது.

தற்போதைய கட்சித் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு நேற்று (25) ஸ்ரீகொத்தாவில் கூடியது.

தேசிய பட்டியல் உறுப்பினர் தொடர்பான முடிவு மற்றும் முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரிய கட்சியின் தலைமையை ஏற்கத் தயாராக இருப்பதாக அறிவித்தமை குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்படவிருந்தது.

இருப்பினும் தேசியப்பட்டியல் குறித்தோ தலைமைப்பதவி குறித்தோ எவ்வித முடிவும் எட்டப்படாமலேயே கட்சியின் செயற்குழுக்கூட்டம் நிறைவு பெற்றுள்ளது.

இதேவேளை புதிய தலைவர் தெரிவு செப்டம்பர் முதல் வாரத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.