துருக்கியின் புதிய சூப்பர்சானிக் ஆளில்லா போர் விமானம் !!

துருக்கியின் Baykar நிறுவனம் உருவாக்கியுள்ள புதிய சூப்பர்சானிக் ஆளில்லா போர் விமானமான Kizilelma கிஸிலெல்மா, இது ஒற்றை என்ஜின் கொண்ட விமானந்தாங்கி கப்பல்களில் இருந்தும் இயங்கும் ஸ்டெல்த் விமானமாகும்.

இந்த Baykar Bayraktar Kizilelma ஆளில்லா போர் விமானமானது துருக்கியின் MIUS எனப்படும் ஆளில்லா சண்டை விமானம் உருவாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டது.

2013ஆம் ஆண்டு இந்த திட்டம் துவங்கப்பட்டது படிப்படியாக முன்னேறி தற்போது அறிமுகம் ஆகியுள்ளது, இனி 2023ஆம் ஆண்டு முதல் பறக்கும் சோதனை நடைபெறும் இந்த திட்டத்தின் மிகவும் முக்கியமான முன்னேற்றம் கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்றது என கூறப்படுகிறது.

இந்த விமானம் தானாகவே மேலேழும்பி தரையிறங்கும் திறன் கொண்டது, குறைந்த ரேடார் சமிக்ஞைகளை வெளிப்படுத்தும், LOS , BLOS, AESA ரேடார், உட்புற குண்டு சுமக்கும் பகுதி போன்ற வசதிகளை கொண்டுள்ளது.

1.5 டன் எடை கொண்டது, 6 டன்கள் எடையை சுமக்க கூடியது, JP-8 & Jet A1, Ivchenko Progress AI-25 அல்லது Ivchenko-Progress AI-322F என்ஜின்களை கொண்டிருக்கும், மிதமான வேகமாக மணிக்கு 735 கிலோமீட்டர் வேகம் மற்றும் அதிகபட்சமாக 1100 மணிக்கு கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்

மேலும் 930 கிலோமீட்டர் தொலைவு செல்லும், 6 மணிநேரம் தொடர்ந்து 11 முதல் 14 கிலோமீட்டர் உயரத்தில் ஆற்றல் கொண்டது, தவிர National AESA Radar, Aselsan குறிவைக்கும் அமைப்பு, மின்னனு போர்முறை அமைப்பு, National SIGINT சிக்னல் உளவு அமைப்பு ஆகியற்றையும் கொண்டிருக்கும்.

இந்த விமானத்தில்
CIRIT
L-UMTAS ASM
Gökdoğan BVR AAM
Bozdoğan AAM
Akdoğan AAM
Gökhan AAM
SOM ALCM
TUBITAK-SAGE BOZOK
TUBITAK-SAGE KUZGUN-TJ
TUBITAK-SAGE KUZGUN-KY
TUBITAK-SAGE KUZGUN-ER,
TUBITAK-SAGE KUZGUN-EW
AKBABA
ROKETSAN ÇAKIR Missile ரக ஏவுகணைகள் இருக்கும்

மேலும்
Teber-81
HGK-82
KGK-82
Teber-82
HGK-83
KGK-83
HGK-84
LHGK-84
TUBITAK-SAGE TOGAN
TUBITAK-SAGE KUZGUN-SS
Aselsan Miniature Bomb
SARB-83 Bunker buster
NEB-84 Bunker buster
MAM-C
MAM-L
MAM-T போன்ற பல்வேறு வகையான குண்டுகளையும் சுமக்கும் என கூறப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.