இலங்கையைச் சேர்ந்த 11 இளைஞர்கள் இந்தியாவில் கைது! – கனடா செல்ல முயன்றார்களாம்.

இலங்கையில் இருந்து விமானம் மூலம் தமிழகம் சென்று அங்கிருந்து கனடா செல்ல முயன்ற 11 பேர் இந்தியாவின் கியூப் பிரிவு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம், திருகோணமலை மற்றும் முல்லைத்தீவைச் சேர்ந்த இளைஞர்களே கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
கடந்த மாதம் 19ஆம் திகதி விமானம் மூலம் சென்னைக்குச் சென்றவர்கள் அங்கிருந்து கேரளாவின் கடற்கரை நகரான கொள்ளம் பகுதிக்குச் சென்றுள்ளனர்.
அங்கே விடுதியில் தங்கியிருந்த வேளையே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
விசாரணைகளின்போது அவர்கள் கனடா செல்ல முயற்சித்தமை தெரியவந்துள்ளது.