கேரளத்தில் நான்கு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
கேரளத்தின் நான்கு தென் மாவட்டங்களில் கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா மற்றும் இடுக்கி ஆகிய நான்கு மாவட்டங்களில் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் மாநிலத்தின் கடலோரப் பகுதிகளிலும் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், மற்ற மாவட்டங்களிலும் மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் இன்று மூடப்பட்டுள்ளது.
பலத்த மழை பெய்யும் என்பதால் மலைப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கப்பட்டனர்.
ஐஎம்டி.யின் சிவப்பு எச்சரிக்கையானது 24 மணி நேரத்தில் 20 செ.மீட்டருக்கும் அதிகமான கனமழை பெய்யும் என்ற எதிர்பார்ப்பைக் காட்டுகிறது.