மரண பயத்தை காட்டிய ஆஃப்கானிஸ்தான் வீரர்கள்… இரண்டே பந்தில் போட்டியை மாற்றிய நசீம் ஷா; மிரட்டல் வெற்றி
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் பாகிஸ்தான் அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றி பெற்றுள்ளது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணியும், பாகிஸ்தான் அணியும் மோதின.
ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.