ரணிலிடம் இருந்து நாளை 30 பேருக்கு இராஜாங்க அமைச்சுப் பதவிகள்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் புதிய அரசாங்கத்தின் 30 இராஜாங்க அமைச்சுப் பதவிகளுக்கான சத்தியப்பிரமாணம் நாளை (08) இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, இதுவரையில் அமைச்சுப் பதவிகள் கிடைக்காத ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் நாளைய தினம் அரச அமைச்சுப் பதவிகளைப் பெற உள்ளனர்.
இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரேயொரு நாடாளுமன்ற உறுப்பினரான வஜிர அபேவர்தனவுக்கும் நாளை அரச அமைச்சு பதவி கிடைக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.