தமிதாவுக்கு 14ம் தேதி வரை விளக்கமறியல்!

ஜனாதிபதி செயலகத்திற்குள் பலவந்தமாக பிரவேசித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நடிகை தமிதா அபேரத்னவை எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு கோரி ஜூலை 9 ஆம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கோட்டை ஜனாதிபதி செயலகத்திற்குள் பலவந்தமாக பிரவேசித்த குற்றச்சாட்டில் தமித அபேரத்ன நேற்று (7) மாலை கைது செய்யப்பட்டார்.