மகாராணி மறைவு – அரச நிறுவனங்களுக்கு ஜனாதிபதி பணிப்புரை!

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவையொட்டி, இன்று (09) முதல் அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எலிசபெத் மகாராணியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்ததாக பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.
ராணி இரண்டாம் எலிசபெத் 1952 முதல் 1972 வரை இலங்கையின் கடைசி ராணியாக பணியாற்றினார்.