போராட்டக்காரர்கள் ‘போக்கிரிகள்’ – இப்படிச் சாடினார் இராஜாங்க அமைச்சர்.

“போராட்டக்காரர்கள் குடுக்காரர்கள், போக்கிரிகள். அவர்கள் தொடர்பில் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை.”
இவ்வாறு நீர்வழங்கல் இராஜாங்க அமைச்சராகப் பதவியேற்றுள்ள சனத் நிஷாந்த தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
“மக்கள் என்னை ஏற்றுக்கொண்டுள்ளனர். அதனால்தான் மூன்று தடவைகள் மாவட்டத்தில் முதலிடம் பிடித்தேன். ஜனாதிபதி பதவி விலகினாலும், நாம் இன்னும் மக்களால் நிராகரிக்கப்படவில்லை” – என்றார்.
அதேவேளை, கஞ்சாவைச் சட்டபூர்வமாக்கி, அதன்மூலம் அந்நியச் செலாவணியைத் திரட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுற்றுலாத்துறை சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்தார்.