சந்நிதி தேர்த் திருவிழாவில் 80 பவுண் நகைகள் ‘அபேஸ்’.
யாழ். தொண்டைமனாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலய தேர்த் திருவிழாவில் பங்கேற்ற அடியவர்களிடம் சுமார் 80 பவுண் நகைகள் திருடப்பட்டுள்ளன என்று தெரியவருகின்றது.
தங்க நகைகளைப் பறிகொடுத்த 25 பேர் முறைப்பாடுகளைப் பதிவு செய்துள்ளனர் என்று பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர்.
வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டைமனாறு செல்வச் சந்நிதி ஆலய தேர்த் திருவிழா நேற்று நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் பங்கேற்றிருந்த நிலையில், அடியவர்களிடம் திருடர்கள் தங்கள் கைவரிசையைக் காட்டியுள்ளனர். வயதானவர்களிடமே அதிகளவில் நகைகள் திருடப்பட்டுள்ளன.
தங்க நகைகளைப் பறிகொடுத்த 25 பேர் வழங்கிய முறைப்பாடுகளின் அடிப்படையில் சுமார் 80 தங்கப் பவுண் நகைகள் திருடப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.