ராஜபக்ச கும்பலுக்கு எதிரான விசாரணைக்கு என்ன நடந்தது? – அரசிடம் சஜித் கேள்வி.

க”கடந்த மே 9ஆம் திகதி அரச வன்முறையை முன்னெடுத்த ராஜபக்சக்கள் மற்றும் அந்தக் கும்பல்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? விசாரணைகளுக்கு என்ன நடந்தது?
இவ்வாறு அரசிடம் கேள்வி எழுப்பினார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ.
மாறாக தமித அபேரத்ன கலைஞர்கள் போன்று இளைஞர், யுவதிகளைக் கைது செய்வதன் மூலம் அரச மிலேச்சத்தனத்தைக் காட்டுவதையே அரசு செய்வது வருகின்றது எனவும் அவர் குற்றம் சாட்டினார்.
இதுபோன்ற வன்முறைகளை ஒருபோதும் அனுமதிக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
வெலிக்கடைச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரபல நடிகை தமிதா அபேரத்னவின் நலன் விசாரிப்பதற்காக இன்று சென்ற எதிர்க்கட்சித் தலைவர், பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஒவ்வொருவரும் தாங்கள் நம்பும் ஜனநாயக அபிப்பிராயத்துக்காக முன் நிற்கும் உரிமையை எந்த அரசாலும் அல்லது எந்தத் தரப்பாலும் மீற முடியாது.
இந்த நாட்டில் மக்களின் அடிப்படை உரிமைகளை மீற ஒருபோதும் இடமளிக்க முடியாது” – என்றார்.