விவசாயிகளுக்கு 40 மில்லியன் அமெரிக்க டொலர் உதவி : சமந்தா பவர் அறிவிப்பு
நேற்று (10) காலை இலங்கை வந்த அமெரிக்க உதவி நிறுவனத்தின் தலைவர் சமந்தா பவர், விவசாயிகளின் நெல் சாகுபடி நடவடிக்கைகள் குறித்து ஆராய்வற்கு பிற்பகல் ஜா-அல பகுதிக்கு விஜயம் செய்தார்.
விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சமந்தா பவர், இந்நாட்டு விவசாயிகளுக்காக 40 மில்லியன் அமெரிக்க டொலர்களை மானியமாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்காவின் ஏஜென்சி ஊடாக இந்தப் பணம் வழங்கப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் ஒரு மில்லியனுக்கும் அதிகமான விவசாயிகள் பயனடைவார்கள் என்றும், அடுத்த பருவத்திற்கான உரங்களை இறக்குமதி செய்வதற்கும், விவசாயிகளின் இதர தேவைகளுக்கும் , உரிய பணம் பயன்படுத்தப்படும் என்றும் சமந்தா பவர் தெரிவித்துள்ளார்.