ரணில் – சமந்தா சந்திப்பு.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி முகவரகத்தின் (USAID) நிர்வாகி சமந்தா பவர் இன்று சந்தித்து உரையாடினார்.
உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு இலங்கைக்கு நேற்று வருகை தந்த சமந்தா பவர், விவசாயத்துக்கு உதவியளிக்கும் வகையில் 40 மில்லியன் அமரிக்க டொலர்களுக்கான நிதி உதவியை அறிவித்தார்.
அத்துடன் இலங்கைக்கு அமெரிக்கா இந்தத் தருணத்தில் உதவி செய்யும் என்ற நிலையில், எதிர்காலத்தில் இலங்கையின் நெருக்கடி தொடர்பில் தமது கவலையையும் வெளிப்படுத்தினார்.
அதேநேரம் இந்தியாவுடன் இலங்கை தொடர்பில் பேச்சுக்கள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சமந்தா பவர் இன்று பல்வேறு மட்டத்தினருடனும் சந்திப்புக்களில் ஈடுபடுகின்றார்.