‘சொக்கா மல்லி’க்கும் இராஜாங்க அமைச்சு.

துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சராக பிரேமலால் ஜயசேகர (சொக்கா மல்லி) நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் இன்று முற்பகல் இந்தப் பதவிப்பிரமாணம் இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க உள்ளிட்ட அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.