ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான ஐரோப்பிய ஒன்றியம்!

சர்வதேச மனித உரிமைச் சட்டங்களுக்கு இணங்க புதிய சட்டம் தயாரிக்கப்படும் வரை பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இடைநிறுத்துமாறு ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக இலங்கை அரசாங்கம் தேவையற்ற பலத்தை பிரயோகித்தமைக்கு ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இன்று கூடிய ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை 51 ஆவது அமர்வில் இலங்கை தொடர்பான விசேட அறிக்கையை சமர்ப்பித்ததுடன் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருக்கு நன்றி தெரிவித்தனர்.