நெல்லியடி முச்சக்கர வண்டிகளை பரிசோதனை செய்யும் நடவடிக்கை
நெல்லியடி நகரத்தில் சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளை பரிசோதனை செய்யும் நடவடிக்கை பிரதேச சபையினரால் முன்னெடுக்கப்பட்டது
நெல்லியடி நகர பகுதியில் சேவையில் ஈடுபடும் சில முச்சக்கரவண்டிகள்,
1.முச்சக்கரவண்டிகளின் பராமரிப்பு இன்மை,
2.அதிக புகை,
3.அதிக ஒலி,
4.பொருத்தமற்ற இருக்கைகள்,
5.அதிகளவு அதிர்வுடன் கூடிய இயந்திர பாவணை
போன்ற பல்வேறு அசௌகரியங்களுடன் சேவையில் ஈடுபடுவதாகவும் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என நெல்லியடி பகுதி மக்களால் கரவெட்டி பிரசேத சபையினருக்கு தெரிவிக்கப்பட்ட முறைப்பாட்டினையடுத்து கரவெட்டி பிரதேச சபை தவிசாளர் ஐங்கரன் தலைமையிலான பிரதேசசபை உத்தியோகத்தர்கள் மற்றும் நெல்லியடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , பொலிஸ் அதிகாரிகள் இணைந்து சகல முச்சக்கர வண்டிகளும் பரிசோதனைக்குட்படுத்தப்படுத்தினர் .
நெல்லியடி நகரப்பகுதியில் சேவையில் ஈடுபடும் 30 முச்சக்கரவண்டிகளில் 12முச்சக்கர வண்டிகள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு தகுதியான முச்சக்கர வண்டிகளுக்கு தகுதிச் சான்றிதலும் வழங்கப்பட்டதோடு குறைபாடுள்ள முச்சக்கரவண்டிகளுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டு மீண்டும் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு எதிர்வரும் 01ம் திகதி முதல் பாவனைக்கு விடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.