ஜெனிவாவில் , இலங்கையை சீனாவும் , வட கொரியாவும் மட்டுமே ஆதரித்துள்ளன.
ஜெனிவா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சீனாவும் வடகொரியாவும் இலங்கைக்கு தமது ஆதரவை தெரிவித்துள்ளன.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வில் ஜெனீவாவில் நேற்று திங்கட்கிழமை (12) சீனா வெளியிட்ட அறிக்கையில், தேசிய இறையாண்மை மற்றும் சுதந்திரத்தைப் பாதுகாப்பதிலும், சமூக ஸ்திரத்தன்மையைப் பேணுவதிலும், பொருளாதார மீட்சியை அடைவதிலும் இலங்கைக்கு வலுவாக ஆதரவளிப்பதாக சீனா தெரிவித்துள்ளது.
மனித உரிமைகள் கவுன்சில் தீர்மானம் 46/1 அரசியல்மயமாக்கலின் விளைவு என்று கூறி, ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலின் சீனப் பிரதிநிதி, “இது பாரபட்சமற்ற, புறநிலை மற்றும் தேர்ந்தெடுக்காத கொள்கைகளைப் பின்பற்றவில்லை, சம்பந்தப்பட்ட நாடுகளால் அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. மேலும் இலங்கையில் மனித உரிமைகளை மேம்படுத்துவதிலும் பாதுகாப்பதிலும் சாதகமான பங்கை வகிக்கவில்லை” என்றார்.
கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு , “பல சவால்களுக்கு மத்தியில் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதில் நிலையான முன்னேற்றத்தை உறுதிசெய்து, மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் மற்றும் ஐக்கிய நாடுகள் அமைப்புடன் தொடர்பில் இருப்பதற்கும் இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட நேர்மையான முயற்சிகளுக்காக பாராட்டுகிறது “எனத் தெரிவித்துள்ளது.