நியூசிலாந்தும் இலங்கைக்கு எதிராக களமிறங்கியது!
கருத்துச் சுதந்திரம் மற்றும் அமைதியான போராட்டங்களுக்கு முழுமையான பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு இலங்கையிடம் நியூசிலாந்து கேட்டுக் கொண்டுள்ளது.
ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வில், 2022 முதல் பாதியில் பெரிய அளவிலான போராட்டங்களுக்கு அதிகாரிகளால் அமைதியான பதில் கிடைத்ததாக நியூசிலாந்து தூதுக்குழு குறிப்பிட்டது.
“எவ்வாறாயினும், எதிர்ப்பாளர்கள் மீது இலங்கை அரசாங்கம் சமீபத்தில் நடத்திய அடக்குமுறை குறித்து நாங்கள் கவலை கொள்கிறோம். கருத்து சுதந்திரம் மற்றும் அமைதியான போராட்டத்திற்கு முழு பாதுகாப்பை உறுதி செய்யுமாறு நியூசிலாந்து இலங்கையிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் திருத்தம் செய்வதில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் நியூசிலாந்து சுட்டிக்காட்டியுள்ளது.
வரலாற்று மனித உரிமை மீறல்கள் உட்பட உள்நாட்டு பொறுப்புக்கூறல் நடவடிக்கைகளை வலுப்படுத்த உயர்ஸ்தானிகர் மற்றும் ஏனைய பங்காளிகளுடன் இணைந்து பணியாற்றுமாறு தூதுக்குழு இலங்கையை வலியுறுத்தியது.